செர்பியாவில் ஜனாதிபதி திரெளபதி முர்முவை சந்தித்த நடிகை சமந்தா

#India #Actress #President
Prasu
3 years ago
செர்பியாவில் ஜனாதிபதி திரெளபதி முர்முவை சந்தித்த நடிகை சமந்தா

தமிழி, தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாகவும் வலம் வரும் சமந்தா நடிப்பில் சமீபத்தில் சாகுந்தலம் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. 

இவர் தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து குஷி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 

இதன் படப்பிடிப்பு 60 சதவீதம் முடிவடைந்த நிலையில் சமந்தா தசை அழற்சி நோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், படப்பிடிப்புப் பாதிக்கப்பட்டது. இதையடுத்து குஷி படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பில் சமந்தா மீண்டும் இணைந்தார். 

இதையடுத்து ‘குஷி’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் சமந்தா நடித்த சிட்டாடல் வெப் தொடர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், நடிகை சமந்தா செர்பியாவில் ஜனாதிபதி திரெளபதி முர்முவை சந்தித்துள்ளார். இவருடன் பாலிவுட் நடிகர் வருண் தவான் மற்றும் சிட்டாடல் படக்குழுவினர் இருந்தனர். 

இது தொடர்பான புகைப்படத்தை நடிகர் வருண் தவான் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4