மின் கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி

#India #Electricity Bill #Minister #Tamilnews #ChiefMinister
Mani
1 year ago
மின் கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி

வணிக நிறுவனங்களுக்கான மின் கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, வெளிமார்க்கெட்டில் மின்சாரத்தை வாங்க வேண்டும் என்பதற்காக செயற்கையான மின் தட்டுப்பாட்டை திமுக அரசு ஏற்படுத்துகிறதோ என சந்தேகம் எழுவதாகக் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், மின்வாரியம் என்பது லாப நஷ்டம் பார்த்து இயங்கக் கூடிய வணிக நிறுவனம் அல்ல என்றும் அது ஒரு சேவைத் துறை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மின் வாரியத்தின் இழப்பை மாநில அரசின் நிதியைக் கொண்டே சரி செய்ய வேண்டும் என்று கூறியுள்ள எடப்பாடி பழனிசாமி, எப்போதெல்லாம் திமுக ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் மின் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான காரணம் என்னவென்பது புரியாத புதிராகவே இருந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

மக்களுக்குத் தேவையற்ற கட்டணச் சுமையை ஏற்றும்போதெல்லாம் வசதியாக மத்திய அரசையும் மற்ற மாநிலங்களையும் திமுக அரசு துணைக்கு அழைத்துக் கொள்வதாகவும் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.