மாவீரன் படம் குறித்த புதிய அப்டேட் வெளியானது!

#Cinema #Actor #Actress #TamilCinema #Movies
Mani
3 years ago
மாவீரன் படம் குறித்த புதிய அப்டேட் வெளியானது!

மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஷ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மாவீரன். இப்படத்தில் சிவகார்த்திகேயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகும் இது தெலுங்கில் 'மாவீருடு' என்று பெயர் வைத்துள்ளனர்.

அதிதி ஷங்கர், சரிதா, மிஷ்கின் (இயக்குனர்) மற்றும் யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 'மாவீரன்' படத்தை ஜூலை 14ஆம் தேதி வெளியிடுவதற்கான ஏற்பாடுகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். சிவகார்த்திகேயனின் 'மாவீரன்' படத்தின் டப்பிங் பணிகள் சமீபத்தில் முடிவடைந்துள்ளன.

 இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது.இதனால் ‘மாவீரன்’ படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினுக்கு சொந்தமான ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதனை படக்குழு வீடியோ ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4