மீண்டும் இணைந்த டைரி பட கூட்டணி

#Cinema #Actor #TamilCinema #Film
Mani
3 years ago
மீண்டும் இணைந்த டைரி பட கூட்டணி

அறிமுக இயக்குனர் இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் அருள்நிதி நடித்த 'டைரி' திரைப்படம் ஆகஸ்ட் 26ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தை பொல்லாதவன், ஆடுகளம், ருத்ரன் படங்களை தயாரித்த பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரித்திருந்தார். உண்மையில் நடந்த கதையில் கொஞ்சம் கற்பனை கலந்து உருவாகி வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

 இந்நிலையில் டைரி படத்தின் கூட்டணி மீண்டும் இணைவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிக்கும் 12அது படத்தின் இயக்குநராக இன்னாசி பாண்டியன் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை வெளியிடும் வகையில் ஒரு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த கூட்டணி மீண்டும் இணைவதற்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4