ஆயுள் தண்டனை சிறை கைதி வடிவமைத்த இ சைக்கிள் - குவியும் பாராட்டுகள்!
கோவை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி வடிவமைத்த இ சைக்கிள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கோவை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக இருப்பவர் யுவ ஆதித்தன். சத்தியமங்கலத்தை சேர்ந்த இவர், காதல் விவகாரம் ஒன்றில் 8 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற கொலை சம்பவத்தில் குற்றவாளியாக நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டு ஆயுள் தண்டனை கைதியாக கோவை மத்திய சிறையில் உள்ளார்.
ஏரோநாட்டிக்கல் பொறியியல் படித்த இவர், சிறையில் உள்ள வெல்டிங் பட்டறையில் வேலை செய்து வந்தார். அப்போது அங்கு ஓரமாக இருந்த பழைய சைக்கிளை பார்த்து அதில் ஏதாவது செய்ய திட்டமிட்டார்.
அதன் அடிப்படையில் அந்த சைக்கிளில் சோலார் பொருத்தி மின்னணு சைக்கிளாக மாற்ற முயன்றார்.இந்த சைக்கிளில் சோலார் பேனல் மட்டுமின்றி, டைனமோ உதவியுடனும் சார்ஜ் செய்ய முடியும். அதன் அடிப்படையில் அந்த சைக்கிளில் சோலார் பொருத்தி மின்னணு சைக்கிளாக மாற்ற முயன்றார்.இந்த சைக்கிளில் சோலார் பேனல் மட்டுமின்றி, டைனமோ உதவியுடனும் சார்ஜ் செய்ய முடியும்.