தமிழர் தாயகத்தில் தொடரும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு: பிரித்தானியாவில் மாநாடு
பிரித்தானியாவில் தமிழர் தாயகத்தில் தொடரும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு என்னும் கருப்பொருளில் சிறப்பு மாநாடு ஒன்று இடம்பெறவுள்ளது.
பிரித்தானிய தமிழர் தேசிய அமைப்புகள் இணைந்து ஒழுங்கு செய்துள்ள இந்த மாநாடு இன்றைய தினம் இடம்பெறவுள்ளது.
இந்த மாநாட்டின் சிறப்பு பேச்சாளர்களாக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரெழுச்சி இயக்க ஒருங்கிணைப்பாளர் தவத்திரு வேலன் சுவாமிகள், மனித உரிமைகள் பரிஸ்டர் பற்றிக் லூயிஸ், சட்டத்தரணி மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர் வீ.எஸ்.எஸ். தனஞ்செயன், மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்,பணிப்பாளர் ஜனனி ஜனநாயகம் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
இடம்: பிரித்தானிய பாராளுமன்றம் வளாகம் - Westminster Parliment
காலம்: 14/06/2023 (புதன் கிழமை)
நேரம்: பி.ப 4:30 - 7:00
ஒருங்கிணைப்பு : பிரித்தானிய தமிழ் தேசிய அமைப்புகள்
தொடர்புகளுக்கு: ஜேக்கப் - 07852 730225