சூர்யா இந்தி படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

#Cinema #Actor #Film #information
Mani
3 years ago
சூர்யா இந்தி படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா ஏற்கனவே ராம்கோபால் வர்மாவின் இந்தி மற்றும் தெலுங்கில் ரத்த சரித்திரா படத்தில் நடித்துள்ளார். மேலும், இப்படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

சரித்திர கதையம்சம் கொண்ட ஒரு இந்தி படத்தில் சூர்யா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை பிரபல இந்தி இயக்குனர் ஓம்பிரகாஷ் மவுரியா டைரக்டு செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மகாபாரதத்தில் வரும் கர்ணன் கதாபாத்திரத்தை மையமாக வைத்து படம் எடுக்கப்படவுள்ளது. 

நவீன தொழில்நுட்பத்தில் பயன்படுத்தி 2 பாகங்களாக உருவாகும் படத்தின் படப்பிடிப்பை தொடங்கவுள்ளனர். ஏற்கனவே சிவாஜி கணேசன் நடிப்பில் கர்ணன் என்ற தமிழ்ப் படம் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. படப்பிடிப்பை அடுத்த வருடம் தொடங்க உள்ளனர். 

 தற்போது சூர்யா சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். கூடுதலாக, வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கும் வாடிவாசல் படமும் கைவசம் உள்ளது. சூரரை போற்று படத்தை எடுத்த சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4