தென்னிந்தியாவில் இசை மூலம் ஈழ தமிழர்களிற்கு பெருமை சேர்த்த லண்டன் தமிழச்சி மாதுளானி

#India #SriLanka #Cinema #TamilCinema #Tamil
Mayoorikka
1 year ago
தென்னிந்தியாவில் இசை மூலம் ஈழ தமிழர்களிற்கு பெருமை சேர்த்த லண்டன் தமிழச்சி மாதுளானி

பிரபல தென்னிந்திய ஊடகமொன்றில் ஈழ தமிழ் மக்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில், மாதுளானி பெர்னாண்டோ என்ற லண்டனில் வசித்து வரும் ஈழ தமிழ் பெண் தனது காந்த குரலினால் திறமையை வெளிப்படுத்தி இசை துறையில் சாதனை படைத்துள்ளார். 

 இலங்கையின் - திருகோணமலையை பிறப்பிடமாக கொண்ட இவர், தற்போது லண்டனில் வசித்து வருகின்றார். இசை துறையில் சாதனை இலங்கையில் நடந்த உள்நாட்டு யுத்தம் காரணமாக லண்டனிற்கு உலம்பெயர்ந்து சென்ற இவர், பிரபல தென்னிந்திய தொலைக்காட்சியான Zeetamil தொலைக்காட்சியினால் நடாத்தப்பட்ட "சரிகமப" இசை நிகழ்ச்சியின் போட்டியாளராக தெரிவானார். 

images/content-image/2023/06/1686793635.png

 இந்த போட்டியில் ஈழத்தமிழ் மக்கள் அனைவரினது மனங்களிலும் மறக்க முடியாமல் உள்ள பாடல்களில் ஒன்றான “விடை கொடு எங்கள் நாடே” என்ற பாடலை சிறப்பாக பாடி, அரங்கத்தை அதிர வைத்து அரங்கில் அமர்ந்திருந்த அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்து, ஈழ தமிழர்களின் வலியை மீண்டும் ஒருமுறை உலகறிய செய்தார். 

 இந்நிலையில் குறித்த இசை போட்டியில் இறுதி போட்டியாளர்களை தெரிவு செய்யும் சுற்றில் தனது திறமையை காட்ட முடியாமல் ஒரு சிறு புள்ளி வித்தியாசத்தில் அந்த போட்டியில் இருந்து வெளியேறினார். தனது இசை பயணத்தினை முடித்துக்கொண்டு லண்டன் திரும்பிய மாதுளானிற்கு லண்டன் விமான நிலையத்தில் ஈழத்தமிழ் ரசிகர்களினால் பெரும் வரவேற்பு கொடுக்கப்பட்டுள்ளது. 

 வெகு விரவில் இவருக்கு தென்னிந்திய திரைப்படங்களில் பாடுவதற்கு வாய்ப்பு கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 மேலும் தான் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த வேளையில் தனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் மாதுளானி நன்றி தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!