'அவதார் 3 ' தொடர் வெளியீடு தாமதம்; கடைசி படம் 2031ல் வெளியாகும் என தகவல்

#Cinema #America #world_news #Director #2023
Mani
3 years ago
'அவதார் 3 ' தொடர் வெளியீடு தாமதம்; கடைசி படம் 2031ல் வெளியாகும் என தகவல்

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009ல் வெளியான அவதார் திரைப்படம் ஹாலிவுட் திரைப்படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வரலாற்றில் புதிய சாதனை படைத்தது. இதனை அடுத்து அவதார் வரிசையின் அடுத்தடுத்த படங்கள் குறித்து ஜேம்ஸ் கேமரூன் எதிர்பார்ப்புகளை விதைத்தார்.

முதல் இரு அவதார் திரைப்படங்களின் வசூல் சாதனை, அடுத்த அவதார்கள் குறித்த எதிர்பார்ப்புகளை அதிகமாக்கின. அவதார் 2 வெற்றியடைந்தால் மட்டுமே அவதார்- 4 மற்றும் அவதார் -5 திரைப்படங்களுக்கு தயாராவோம் என்றும் முன்னரே கேமரூன் அறிவித்திருந்தார். அதன்படி அவதார் -2 வெற்றியானது, அவதார் 5 வரை உறுதி செய்தது.

மேலும், டிசம்பர் 2024-ல் அவதார் -3 திரைப்படம் வெளியாகும் என ஜேம்ஸ் கேமரூன் அறிவித்திருந்தார். அவதார் -2 படப்பிடிப்பின் ஊடாகவே, அவதார் -3க்கான பெருமளவு படப்பிடிப்பும் முடிந்திருப்பதால், குறுகிய இடைவெளியில் அடுத்த அவதார் வெளியாகும் என அவர் உறுதியளித்திருந்தார். ஆனால் தற்போதைய டிஸ்னி நிறுவன அறிவிப்பின்படி, திட்டமிடப்பட்டிருந்த டிசம்பர் 2024ல் இருந்து டிசம்பர் 2025க்கு அவதார் -3 திரைப்படத்தின் வெளியீடு தள்ளிப்போகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4