'பிச்சைக்காரன் 2' திரைப்படத்தின் ஹாட் ஸ்டார் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு

#Cinema #TamilCinema #Movies
Mani
3 years ago
'பிச்சைக்காரன் 2' திரைப்படத்தின் ஹாட் ஸ்டார் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு

விஜய் ஆண்டனி இயக்கத்தில் வெளியான 'பிச்சைக்காரன் 2' திரைப்படம் கடந்த 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி விமர்சகர்களிடம் கலவையான வரவேற்பைப் பெற்றது. இதில் காவ்யா தப்பார், ராதா ரவி, ஒய்.ஜி.மகேந்திரன், மன்சூர் அலிகான், ஜான் விஜய், ஹரிஷ் பேரடி, யோகி பாபு மற்றும் பிற நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படம் ரூ.30 கோடிக்கு மேல் வசூல் செய்தது. மேலும், படத்தின் வெற்றி விழா கடந்த மாதம் விசாகப்பட்டினத்தில் கொண்டாடப்பட்டது.

 இந்நிலையில் ஓடிடி ‘பிச்சைக்காரன் 2’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனையடுத்து வரும் 18ம் தேதி ஹாட் ஸ்டார் ஓடிடியில் 'பிச்சைக்காரன் 2' படம் வெளியாகிறது. இத்தகவலை படக்குழுவினர் போஸ்டர் மூலம் தெரிவித்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4