ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவலை வெளியிட்ட விஜய்

#Cinema #Actor #Lanka4 #Vijay
Kanimoli
3 years ago
ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவலை வெளியிட்ட விஜய்

விஜய் தற்போது லியோ மற்றும் தளபதி 68 படத்தில் என்னதான் பிசியாக இருந்தாலும் அவருடைய அரசியல் வாழ்க்கைக்கு கொஞ்சம் டைம் ஒதுக்குறாரு. இது சம்பந்தமாக விஜய், ரசிகர்களை அடிக்கடி சந்தித்து தன்னுடைய அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கைகளை விவாதித்துக் கொண்டிருக்கிறார்.

 இதைத் தொடர்ந்து அடுத்த பிளான் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடுகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அதற்காக நாளை பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் முதல் மூன்று இடத்தை பிடித்த மாணவர்களை நேரடியாக சந்திக்க இருக்கிறார்.

 அதற்கு முதற்கட்ட வேலையாக ஏற்கனவே 234 தொகுதி வாரியாக முதல் மூன்று இடத்தை பிடித்த மாணவர்களின் லிஸ்ட் இவருடைய ரசிகர்கள் தயார் செய்துள்ளனர். இந்நிகழ்ச்சி சென்னை நீலாங்கரை பகுதியில் நடைபெற இருப்பதால் கோலாகலமாக ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

 ஆனால் இதில் ஒரு விஷயத்தை கண்டிப்பாக ஃபாலோ பண்ண வேண்டும் என்று விஜய், இவருடைய ரசிகர்களுக்கு ஒரு கண்டிஷனை போட்டிருக்கிறார். அதாவது இதை விளம்பரப்படுத்துவதற்காக இவருடைய ரசிகர்கள் முக்கியமான இடங்களில் பேனர் வைக்க திட்டமிட்டு இருந்தார்கள்.

 ஆனால் அதற்கு விஜய் மறுப்பு தெரிவித்து எந்த இடங்களிலும் பேனர் மற்றும் கட் அவுட் வைக்க கூடாது என்று சொல்லிவிட்டார். ஆனாலும் ரசிகர்கள் எப்படியாவது இந்த நிகழ்ச்சியை ஆரவாரப்படுத்த வேண்டும் என்பதற்காக சுவர் விளம்பரம் செய்து வருகின்றனர்.

 இவர் என்னதான் அரசியல் ரீதியாக இது அனைத்தையும் செய்வதாக இருந்தாலும் இதுவரை இவரை போல் எந்த ஒரு நடிகரும் செய்யாததை செய்து வருகிறார் என்ற பெருமிதத்துடன் இவருடைய ரசிகர்கள் ரொம்பவே இவரை நினைத்து சந்தோஷப்பட்டு வருகிறார்கள். ஏதோ ஒரு விதத்தில் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை கிடைக்குது என்றால் அது நிச்சயமாக நல்ல விஷயமாகத்தான் பார்க்கப்பட்டு வருகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4