சூப்பரான ஸ்நாக்ஸ் கீரை பக்கோடா

#Recipe #Cooking #How_to_make
Mani
2 years ago
சூப்பரான ஸ்நாக்ஸ் கீரை பக்கோடா

தேவையான பொருட்கள்:

1 கை பிடி கீரை 

1 வெங்காயம் 

3 டேபிள் ஸ்பூன் கடலை மாவு

1 டீஸ்பூன் மிளகு 

1 டீஸ்பூன் சீரகம் 

எண்ணெய் பொரிக்க தேவையான அளவு

உப்பு தேவையான அளவு

செய்முறை:

முதலில் வெங்காயம், மற்றும் கீரை இரண்டையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

அடுத்து ஒரு கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இரண்டையும் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.

பிறகு ஒரு பாத்திரத்தில் கடலைமாவு, மற்றும் தேவையான அளவு உப்பு, வதக்கிய கீரை, மிளகு, சீரகம் சேர்த்து கெட்டியாக பிசைந்துகொள்ளவும்.

 அடுத்து பொரிக்க தேவையான அளவு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கீரையை கிள்ளி போட்டு சிவக்க பொரித்து எடுக்கவும். இப்பொழுது சுவையான கீரை பக்கோடா தயார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4