சமூக வலைதளத்தில் வைரலாகும் மாமன்னன் டிரைலர்

#Cinema #TamilCinema #Social Media #trailer
Mani
3 years ago
சமூக வலைதளத்தில் வைரலாகும் மாமன்னன் டிரைலர்

'கண்ணை நம்பாதே' படத்திற்குப் பிறகு உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் 'மாமன்னன்'. இப்படத்தை ‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்குகிறார். வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் இப்படத்தில் குறிப்பிடத்தக்க கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

 'மாமன்னன்' படத்தின் ரிலீஸ் வெளியீட்டு பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், சமீபத்தில் வெளியான இப்படத்தின் பாடல்கள் கவனம் பெற்றுள்ளது. 'மாமன்னன்' படத்தின் டிரைலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்து, தற்போது வெளியாகியுள்ளது. ரசிகர்கள் டிரெய்லரை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.அழுத்தமான வசனங்களை கொண்டுள்ள இந்த டிரைலரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4