விஜய்யின் பிறந்த நாளில் வெளியாகும் 'லியோ' படத்தின் முதல் பாடல்! ரசிகர்கள் உற்சாகம்

#Cinema #TamilCinema #Vijay
Mani
3 years ago
விஜய்யின் பிறந்த நாளில் வெளியாகும்  'லியோ' படத்தின் முதல் பாடல்! ரசிகர்கள் உற்சாகம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் லியோ. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதில் அர்ஜுன், சஞ்சய் தத், த்ரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், சாண்டி மற்றும் மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்துள்ளது, மேலும் இசை, வெளியீடு மற்றும்ஓடிடி உரிமம் மூலம் வெளியீட்டிற்கு முன்பே 350 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. சில நிமிடங்களுக்கு முன்பு இயக்குனர் லோகேஷ் கனகராஜின் 'ரெடியா?' என்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். இது அவரது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

 லியோ படம் குறித்த சில செய்திகளை ரசிகர்களுக்கு லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார். விஜய் பிறந்தநாளான ஜூன் 22-ம் தேதி இப்படத்தின் முதல் பாடலான "அல்டர் ஈகோ நா ரெடி" பாடல் வெளியாகும் என போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளார். இந்த செய்தியை ரசிகர்கள் மிகவும் உற்சாகமாக பகிர்ந்து வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4