The Ashes - முதல் நாளிலே டிக்ளயர் செய்து வலுவான நிலையில் இங்கிலாந்து அணி

#Australia #Test #Cricket #England
Prasu
3 years ago
The Ashes - முதல் நாளிலே டிக்ளயர் செய்து வலுவான நிலையில் இங்கிலாந்து அணி

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் பங்கேற்கிறது. இந்நிலையில், ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் இன்று தொடங்கியது. 

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 78 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 393 ரன்கள் குவித்தது. ஜோ ரூட் பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினார். 

அவர் 118 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். பேர்ஸ்டோவ் 78 ரன்களும், சாக் கிராலி 61 ரன்களும் எடுத்தனர். இறுதியில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 78 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 393 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

ஆஸ்திரேலிய அணி சார்பில் நாதன் லயன் 4 விக்கெட்டும், ஹசில்வுட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

 இதையடுத்து, முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா முதல் நாள் முடிவில் 14 ரன்கள் எடுத்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4