லியோவின் முதல் சிங்கிள் பாடல் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22 அன்று வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

#Actor #TamilCinema #Director #Movies
Mani
3 years ago
லியோவின் முதல் சிங்கிள் பாடல் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22 அன்று வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. அனிருத் இசையமைக்க, செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோவின் கீழ் லலித் குமார் தயாரித்துள்ளார். நடிகர்கள் அர்ஜுன், சஞ்சய் தத், த்ரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், சாண்டி மற்றும் மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இந்நிலையில், நடிகர் விஜய்யின் பிறந்தநாளை ஒட்டி, ஜூன் 22ஆம் தேதி லியோ படத்தின் அறிமுகப் பாடல் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4