நடிகர் விஜய் இன்று மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ரொக்க பரிசு வழங்கும் விழா நீலாங்கரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது

#Cinema #Actor #Lanka4 #Vijay #School Student #Prize #Chennai
Mani
3 years ago
நடிகர் விஜய் இன்று மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ரொக்க பரிசு வழங்கும் விழா நீலாங்கரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசு வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது.

 இதற்காக நீலாங்கரை பகுதியில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வெற்றி பெற்ற மாணவர்களை விஜய் நேரில் சந்தித்து சான்றிதழ் மற்றும் ரொக்கப் பரிசுகளை வழங்குவார். தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று, 234 தொகுதிகளிலும் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களைக் கணக்கிட்டு, பெற்றோருடன் நீலாங்கரை பகுதியில் உள்ள ஆர்.கே. கன்வென்சன் சென்டருக்கு வரவழைக்கப்பட்டனர், அங்கு பெற்றோருக்கும் மாணவர்களுக்கும் உரிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.

 இந்த நிகழ்ச்சிக்கு விஜய் தனது கட்அவுட்களை வைக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்ட நிலையில், ரசிகர்கள் சுவர் ஓவியங்களை வரைவதில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், நடிகர் விஜய் தனது வீட்டில் இருந்து நீலாங்கரை மண்டபத்திற்கு காரில் சென்றபோது, ​​ரசிகர்கள் மோட்டார் சைக்கிள்களில் பின்னால் சென்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4