'ஆதிபுருஷ்' படக்குழுவினர் அதிர்ச்சி! முழு படமும் இணையத்தில் வெளியானது

#Cinema #Film #Lanka4 #Movies
Mani
3 years ago
'ஆதிபுருஷ்' படக்குழுவினர் அதிர்ச்சி! முழு படமும் இணையத்தில் வெளியானது

ராமாயணக் கதையை அடிப்படையாகக் கொண்ட ஆதிபுருஷ் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் திரைக்கு வெளியாகியுள்ளது. இதில் பிரபாஸ் ராமராகவும், சயீப் அலிகான் ராவணனாகவும், கீர்த்தி சனோன் சீதையாகவும் நடித்துள்ளனர், மேலும் அதிக பட்ஜெட்டில் உருவாகியுள்ளது.

ஆதி புருஷ் படம் திரைக்கு வரும் முன்பே பல சர்ச்சைகளை சந்தித்தார். மீசையுடன் இருந்த பிரபாசின் ராமர் தோற்றத்தை பலர் விமர்சித்தனர். மேலும், டிரெய்லரில் உள்ள சில காட்சிகள் எதிர்ப்புகளை கிளப்பியது. நேபாளத்தில் படம் திரையிடப்பட வேண்டுமானால், சீதையை இந்தியாவின் மகள் என்று குறிப்பிடும் வரியை நீக்க வேண்டும் அப்பொழுதுதான் நேபாளத்தில் திரையிட அனுமதிப்போம் என்று அங்குள்ள மேயர் நிபந்தனை விதித்தார். இதனால், அந்த வசனம் நீக்கப்பட்டது.

ஆதிபுருஷ் திரைப்படம் பல சவால்களை எதிர்கொண்டது, சமீபத்தில் திரையரங்கில் வெளியிடப்பட்டனர். ஆதிபுருஷ் படத்துக்கு இன்னொரு சோதனையாக திருட்டு இணையதளம் வந்துள்ளது. படம் வெளியான சிறிது நேரத்திலேயே, முழு திரைப்படமும் சட்டவிரோத இணையதளத்தில் கசிந்தது, இது படக்குழுவினருக்கு அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியது. இதனால் வசூல் பாதிக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4