அப்பிள் பழமானது பார்கின்சன் நோயிலிருந்து மூளையை பாதுகாக்கும். இதன் ஏனைய பயன்கள்...

#Health #Fruits #Benefits #Lanka4 #ஆரோக்கியம் #உடல் #பயன்பாடு #லங்கா4
அப்பிள் பழமானது பார்கின்சன் நோயிலிருந்து மூளையை பாதுகாக்கும். இதன் ஏனைய பயன்கள்...

 நாளுக்கு ஒரு அப்பிள், மருத்துவரைத் தூர வைக்கும் (An apple a day keeps the doctor away) என்ற ஆங்கிலப் பழமொழியின் கூற்றுப்படி,  ஒரு நாள் ஒரு அப்பிள் பழம் சாப்பிட்டால் நெடுங்காலமாக நோயின்றி வாழலாம் என்று அந்த பழைய பழமொழியின் படி அப்பிள் உடல்நலத்திற்கு மிக நல்லது என்று அக்காலத்திலேயே கருதப்பட்டது. 

தற்போது அப்பிள்களுக்குப் பலவிதமான புற்று நோய்களைத் தடுக்கும் ஆற்றல் உள்ளது என நிரூபிக்கப்பட்டுள்ளது. இதய நோய்கள், எடைக்குறைவு, கொழுப்புச்சத்துக் குறைவு ஆகியவற்றிற்கும் அப்பிள் உதவுகிறது.

 அப்பிளில் காணப்படும் சில இரசாயனப்பொருட்கள் அல்செய்மர்ஸ் (Alzheimer's), பார்கின்சன் (Parkinson's) நோய்களிலிருந்து மூளையைப்பாதுகாக்கின்றன. அப்பிளில் உள்ள ஃபீனால் வகைப் பொருட்கள் (phenolics) இயற்கையாகவே ஆக்சிஜனேற்றத் தடுப்புச்சக்தி உடையவை என்பதால், மூளையை நரம்புப் பாதிப்பிலிருந்து பாதுகாக்கின்றன என கார்னெல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். 

இந்த ஆராய்ச்சிக்கு நியு யார்க் பகுதியில் விளைந்த 'ரெட் டெலிசியஸ்' வகை அப்பிள்கள் பயன்படுத்தப்பட்டன. எல்லா அப்பிள்களிலும் இவ்வகை இரசாயனப்பொருட்கள் உள்ளன என்றாலும், அவற்றின் அளவு வருடத்தையும், வளரும் இடத்தையும் பொருத்து மாறுபடும் என்று இவ்விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர் (ஆதாரம்: Journal of food science, Nov/Dec 2004).

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4