உங்கள் வீட்டிலிருக்கும் குபேரன் சிலையை எப்படி வைத்தால் செல்வம் சேரும்

#spiritual #Lanka4 #ஆன்மீகம் #லங்கா4
Mugunthan Mugunthan
10 months ago
உங்கள் வீட்டிலிருக்கும் குபேரன் சிலையை எப்படி வைத்தால் செல்வம் சேரும்

பணம் சேர வேண்டும் என்பதற்காக வீட்டில் சில வாஸ்து பரிகாரங்களை செய்கிறோம். அதோடு சேர்த்து ஒரு குறிப்பிட்ட தெய்வத்தின் படம் அல்ல சிலையை வாங்கி, வீட்டில் உள்ள குறிப்பிட்ட இடங்களில் வைக்கிறோம்.

 ஒரு காரியம் நடக்க வேண்டும் என நாம் பரிகாரமாக ஒரு பொருளை வீட்டில் வாங்கி வைக்கிறோம் என்றால் அதை வீட்டில் எந்த திசை நோக்கி, எந்த இடத்தில் வைக்கிறோம் என்பதை பொறுத்து பலன்கள் மாறுபடும்.

இப்படி பணத்தை ஈர்ப்பதற்காக பலரின் வீடுகளில் குபேர சிலையை வாங்கி வைத்திருப்பதை நாம் பார்த்திருக்கிறோம். பெரும்பாலும் குபேர சிலை வீட்டின் நுழைவு வாயில், பூஜை அறையில் இருப்பதை காண முடியும்.

 செல்வத்திற்கு அதிபதியான குபேரரின் சிலையை நாம் வீட்டில் வைத்தால் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும் என்பது நம்பிக்கை. ஆனால் இந்த சிலையை எங்கு, எப்படி வைக்கிறோம், அதுவும் குபேரனின் பலவிதமான ரூபங்களில் எந்த ரூப சிலையை வாங்கி, எந்த இடத்தில் வைக்கிறோம் என்பது மிக மிக முக்கியமான ஒன்று.

 குபேரர் சிலை வாங்கும் போது தோளில் பண மூட்டையும், முகம் முழுவதும் சிரிப்புடன் அமர்ந்த நிலையில் இருக்கும் சிலையை வாங்கி வீட்டின் வடகிழக்கு திசையில் வைத்து, குபேரர் தென் மேற்கு திசையை பார்த்தபடி இருப்பது போல் வைக்க வேண்டும். 

இந்த திசையில் வைக்க வாய்ப்பு இல்லாதவர்கள் வீட்டின் ஹால், வீட்டிற்கு வருபவர்கள் கண்களில் படும் வகையில் வைக்கலாம். குபேரர் சிலை வீட்டின் வாசலை பார்த்து இருப்பது போல் வைப்பது இன்னும் சிறப்பானதாகும்.

 இதனால் மகாலட்சுமியின் கடாட்சம் வீட்டில் நிறைந்திருக்கும் நின்று கொண்டிருப்பது போன்ற குபேரர் சிலையை பண பரிவர்த்தனை நடக்கும் இடங்களில் வாங்கி வைக்கலாம்.

 தொழில் செய்யும் இடங்கள், பணப்புழக்கம் அதிகம் உள்ள இடங்களில் இதை வாங்கி வைக்கலாம். இதனால் தொழில் ரீதியாக நாம் மற்றவர்களுக்கு கொடுக்கும் பணம் மீண்டும் விரைவில் நம்மிடமே வருவதற்கான வாய்ப்பு உருவாகும். 

நிறைய வருமானமும் வரும் என்று அர்த்தம் கைகளை மேலே தூக்கியபடி இருக்கும் குபேரர் சிலையை வாங்கி வீட்டின் சமையலறையில் வைப்பது மிகவும் நல்லது. மிக சக்தி வாய்ந்த பரிகாரமான இதை செய்வதன் மூலம் வீட்டில் தானியங்களுக்கு குறைவில்லாமல் இருக்கும்.

ஆகவே குபேரன் சிலையை வீட்டில் எவ்வறையிலும் வைக்கலாம் ஆனால் வைக்குமிடத்தின்திசை மற்றும் வடிவம் பிழைக்குமாயின் வீட்டில் செல்வம் பெருகும் அளவு குறைந்து முழுப்பயனையும் அடையாது விடலாம்.