வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த 3 குழந்தைகள் காருக்குள் சடலமாக மீட்பு!

#India #Death #children #Tamilnews #Breakingnews #Died #Mumbai
Mani
3 years ago
வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த 3 குழந்தைகள் காருக்குள் சடலமாக மீட்பு!

மகாராஷ்டிரா

நாக்பூர் அருகே உள்ள பரூக் நகர் பகுதியைச் சேர்ந்த தவுபிக் கான் (4), அலியா(6), அப்ரீன் கான்(6) என்ற 3 குழந்தைகள் சனிக்கிழமை மதியம் 2.30 மணி அளவில் வீட்டில் இருந்து திடீரென மாயமானர். இதில் தவுபிக் கான் மற்றும் அலியா உடன் பிறந்தவர்கள். அப்ரீன் கான் இவர்களின் உறவுக்கார பையன்.

இவர்கள் மூவரும் மத்திய 2.30 மணி அளவில் வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த நிலையில் தீடீரென காணாமல் போனார்கள். இருள் சூழந்த பிறகும் வீடு திரும்பாத நிலையில், மாலை 7 மணி அளவில் பெற்றோர் போலீசாரிடம் புகார் அளித்தனர். குழந்தைகளை யாரோ கடத்தி சென்றுவிட்டார்கள் என அஞ்சி போலீசார் சிசிடிவி காட்சிகளை எடுத்து சோதனை மேற்கொண்டனர்.

இரவு தொடங்கி அடுத்த நாள் பகல் வரை நடத்திய சோதனையில் பலன் ஏதும் கிடைக்கவில்லை. சிசிடிவில் ஏதும் விவரம் கிடைக்காததால் வீட்டின் அருகே உள்ள பகுதியில் போலீசார் சோதனை செய்து விசாரித்தனர்.

அப்போது நேற்று மாலை 7 மணி அளவில் வீட்டின் 100 மீட்டர் தொலைவில் இருந்த எஸ்யூவி கார் ஒன்றில் இருந்து துர்நாற்றம் வரவே சந்தேகம் ஏற்பட்டு போலீசார் காரின் கதவை உடைத்து பார்த்தனர். அதில் தொலைந்து போன மூன்று குழந்தைகளும் சடலமாக கிடத்தனர். இது குழந்தைகளின் பெற்றோரை பெரும் அதிர்ச்சி மற்றும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4