சிறிலங்கா ஜனாதிபதி ரணிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் போராட்டம்! (இரண்டாம் இணைப்பு)
சிறிலங்கா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க லண்டன் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் நிகழ்வு ஒன்றில் உரையாற்றுவதற்காக ரணில் விக்ரமசிங்க லண்டன் வருகை தந்திருந்தார்.
இந்த நிலையிலேயே ரணிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டன் வாழ் ஈழத் தமிழர்களினால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டோர் கறுப்பு உடை அணிந்து இனப்படுகொலையாளியே வெளியேறு..என்ற கோஷங்களை எழுப்பி எதிர்ப்பில் ஈடுபட்டனர்.
இலண்டனில் உள்ள இன்டர்கொன்டினென்டல் பார்க் லேன் ஹோட்டலுக்கு வெளியில் இடம்பெற்றுள்ளது.
(இரண்டாம் இணைப்பு)
குறித்த போராட்டம் நடந்து கொண்டிருந்த வேளை, பொலிஸார் அவ்விடத்திற்கு வருகை தந்து போராட்டத்திற்கு பயன்படுத்திய கொடி தடை செய்யப்பட்டது என கூறியதாகவும் அதற்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், இது தடை செய்யப்பட்ட கொடியல்ல எனவும் இது தமிழர்களின் கொடி எனவும் தெரிவித்துள்ளனர்.
அதன்பின்னர் பொலிஸார் தமிழ் மக்களின் கொடியை பயன்படுத்தலாம் எனவும் அவர்கள் வேறு கொடி என நினைத்து தவறாக கூறியதாகவும் மன்னிப்பு கேட்டுள்ளதாகவும் அங்கிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை இதனை தொடர்ந்து தற்போது பிரித்தானிய நாடாளுமன்றத்திற்கு அருகில், இலங்கை ஜனாதிபதி ரணில் இரண்டாவது நிகழ்ச்சியில் கலந்துகொள்ள போவதாகவும் அங்கும் போராட்டம் தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.