நம்பிக்கை துரோகம் செய்த மேனேஜர்; நொந்து போன ராஷ்மிகா!

#Cinema #Actress #Tamilnews #Breakingnews #ImportantNews
Mani
3 years ago
நம்பிக்கை துரோகம் செய்த மேனேஜர்; நொந்து போன ராஷ்மிகா!

கடந்த 2021 ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ராஷ்மிகா என்ட்ரி கொடுத்தார். அதைத் தொடர்ந்து மீண்டும் தமிழில் விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்தில் நடித்திருந்தார்.

அல்லு அர்ஜூடன் இவர் ஜோடிபோட்டு நடித்த புஷ்பா திரைப்படம் பட்டையை கிளப்பியது. அந்த படத்தில் ஸ்ரீவள்ளியாக நடித்திருந்தார். அடுத்ததாக, உருவாகி வரும் புஷ்பா 2 படத்திலும் ராஷ்மிகா நடித்து வருகிறார்.

இந்நிலையில், தன்னிடத்தில் நீண்ட நாட்களாக ராஷ்மிகாவின் மேனேஜராக இருந்தவரை நடிகை ராஷ்மிகா அதிரடியாக நீக்கி உள்ளார். அவர் தன்னிடம் சுமார் 80 லட்சம் ரூபாயை மோசடி செய்தது தெரியவந்ததால் ராஷ்மிகா இந்த அதிரடியான நடவடிக்கையை எடுத்துள்ளார்.

அந்த நபர் ராஷ்மிகா, சினிமாவில் அறிமுகமான காலகட்டத்தில் இருந்து அவருக்கு மேனேஜராக பணியாற்றி வந்தவராம். இதனால், அவர் மீது ராஷ்மிகா அதீத நம்பிக்கை வைத்திருந்துள்ளார். ஆனால், அந்த நம்பிக்கையை அந்த நபர் தகர்த்து விட்டார் என்று ராஷ்மிகா கருதுகிறார். கூடவே இருந்து மேனேஜர் துரோகம் செய்ததால் ராஷ்மிகா கவலையில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4