இலங்கைக்கு வருகைத் தந்துள்ள 50,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள்

#SriLanka #Tourist #Lanka4
Kanimoli
3 years ago
இலங்கைக்கு வருகைத் தந்துள்ள 50,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள்

ஜூன் மாதத்தின் முதல் 18 நாட்களில் 50,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளனர். இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்ட சமீபத்திய தரவுகளின்படி, ஜூன் மாதத்தில் இதுவரை 52,663 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.

 ஜூன் மாதத்தில், இந்தியாவில் இருந்து அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வந்ததாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

 இதேவேளை, ரஷ்யாவிலிருந்து 4,748 சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 3,905 பேரும், சீனாவிலிருந்து 2,823 பேரும், அவுஸ்திரேலியாவிலிருந்து 2,688 பேரும், கனடாவிலிருந்து 2,503 சுற்றுலாப் பயணிகளும் இந்த மாதத்தில் இலங்கைக்கு வந்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4