படப்பிடிப்பில் விபத்து, கல்யாணி பிரியதர்ஷன் காயம்! ரசிகர்கள் அதிர்ச்சி!

#Cinema #Accident #Actress #TamilCinema #Tamilnews #Kerala
Mani
3 years ago
படப்பிடிப்பில் விபத்து, கல்யாணி பிரியதர்ஷன் காயம்! ரசிகர்கள் அதிர்ச்சி!

கொச்சி

இயக்குநர் பிரியதர்ஷன்–நடிகை லிஸி தம்பதியின் மகள் கல்யாணி பிரியதர்ஷன். இவர் தமிழில் ‘ஹீரோ’, ‘மாநாடு’ படங்களிலும், ‘புத்தம் புது காலை’ வெப் தொடரிலும் நடித்துள்ளார். மலையாளத்தில் இவர் நடித்து கடந்த வருடம் வெளியான ‘ஹ்ருதயம்’ வரவேற்பைப் பெற்றது. இப்போது ஜோஷி இயக்கும் ‘ஆண்டனி’ என்ற மலையாளப் படத்தில் நடித்து வருகிறார். இதில் ஜோஜு ஜார்ஜ், செம்பன் வினோத், விஜயராகவன் உட்பட பலர் நடிக்கின்றனர்.

கடந்த மே மாதம் தொடங்கிய இதன் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது. படத்துக்காக சமீபத்தில் ஆக்‌ஷன் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. டூப் போடாமல் கல்யாணி பிரியதர்ஷன் நடித்தார். அப்போது அவருக்கு கையில் காயம் ஏற்பட்டது. இதுபற்றி வீடியோ வெளியிட்டுள்ள அவர், “சண்டைக் காட்சிகள் உடல் பலவீனமானவர்களுக்கு அல்ல” என்று தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4