"நா ரெடி"- 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்து

#India #Cinema #TamilCinema #Vijay #Tamilnews
Mani
3 years ago
"நா ரெடி"- 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்து

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘லியோ’. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ள இதற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், த்ரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய நடிகர்களாக நடித்துள்ளனர். இப்படம் இறுதிக்கட்ட படப்பிடிப்பை நெருங்கி வருகிறது.நேற்று, சரியாக 12 மணிக்கு விஜய்யின் பிறந்தநாளில் ‘லியோ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார். இதைத் தொடர்ந்து இன்று இப்படத்தின் முதல் பாடலான “ஆல்டர் ஈகோ நா ரெடி” லிரிக் வீடியோ வெளியிடப்பட்டது.

இந்நிலையில் பாடல் வெளியான சில நிமிடங்களிலேயே 2 மில்லியன் பார்வையாளர்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. வெளியான சில நிமிடங்களிலேயே, மாஸ்டர் படத்தின் வாதி கம்மிங் பாடலின் பார்வையாளர்களை விட, "நா ரெடி" பாடல் அதிக பார்வையாளர்களைப் பெற்றது.

நா ரெடி" பாடல் ஒரு மணி நேரத்திற்குள் ஐந்து மில்லியன் பார்வைகளைப் பெற்றது. இதையடுத்து 10 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வையாளர்கள் என்ற சாதனையை படைத்து வருகிறது. சோனி மியூசிக் சவுத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4