ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 170 படத்தை இயக்குகிறார் இயக்குநர் டி.ஜே ஞானவேல்

#India #Cinema #TamilCinema #Director #2023 #Tamilnews #ImportantNews #rajini kanth
Mani
2 years ago
ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 170 படத்தை இயக்குகிறார் இயக்குநர் டி.ஜே ஞானவேல்

லைகா புரொடக்சன்ஸ் - சுபாஸ்கரன் தயாரித்து இயக்குநர் டி.ஜே ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் படம் தலைவர் 170.

தற்போது நடிகர் ரஜினிகாந்த், ஜெயிலர், லால் சலாம் உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் நிலையில் அதற்காக எதிர்பார்ப்புகள் ரசிகர்களிடம் அதிகமாக இருந்து வருகிறது. ரசிகர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியாக தலைவர் 170 படத்தை லைகா தயாரிப்பதாக முன்பு அறிவித்தது. இது தொடர்பாக, இயக்குநர் டி.ஜே ஞானவேல் இயக்கத்தில், அனிருத் இசையில், பிரம்மாண்டமான திரைப்படங்களைப் படைத்தளிக்கும் திரு. சுபாஸ்கரன் தயாரிப்பில், லைகா புரொடக்ஷன்ஸ் மூலம் "#தலைவர் 170" திரைப்படம் 2024-ஆம் ஆண்டு திரைக்கு வரும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் என்று அறிவித்திருந்தது.

இந்நிலையில் தலைவர் 170 படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் ( ஜூலையில்) துவங்க உள்ளதாகவும், ரஜினிகாந்த் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாகவும், இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் ஆக்ஷ்ன் கிங் அர்ஜுன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கடுத்தாக லியோ படத்தை முடித்த பிறகு லோகேஷ் கனகராஜ், ரஜினிகாந்த்தை வைத்து தலைவர் 171 படத்தை இயக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது ரசிகர்களை இன்னும் உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4