இலங்கையுடனான திட்டங்களை மேலும் விரிவுபடுத்த தயார்: சீன வெளியுறவு அமைச்சர்

#SriLanka #China #Ali Sabri
Mayoorikka
2 years ago
இலங்கையுடனான திட்டங்களை மேலும் விரிவுபடுத்த தயார்: சீன வெளியுறவு அமைச்சர்

இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, சீன வெளியுறவு அமைச்சர் குயின் கேங்கைச் சந்தித்தார் 

 இந்த சந்திப்பில், இருதரப்பு உறவு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் இலங்கையுடனான தமது பங்காளித்துவத்தை பலப்படுத்தவும் விரிவுபடுத்தவும் சீனா தயாராகவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

 உலகப் பொருளாதார மாநாடு மற்றும் இருதரப்பு சந்திப்புகளில் பங்கேற்பதற்காக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான குழுவினர் சீனாவுக்கு சென்றுள்ளனர்.

 உலகப் பொருளாதார மாநாடு எதிர்வரும் 27 முதல் 29 ஆம் திகதி வரை சீனாவின் தியான்ஜினில் நடைபெறவுள்ளது. உலகப் பொருளாதாரத்தின் உந்து சக்தி' என்ற கருப்பொருளைக் கொண்ட இந்த மாநாட்டில் 90 நாடுகளைச் சேர்ந்த அரசியல் மற்றும் வணிகத் தலைவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்

 வெளிவிவகார அமைச்சர், இந்த விஜயத்தின் போது சீனாவின் உயர்மட்ட பிரமுகர்களையும் சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார்.

 அத்துடன், பெய்ஜிங்கில் வசிக்கும் இலங்கை சமூகம் மற்றும் தியான்ஜின் பல்கலைக்கழகத்தில் உள்ள இலங்கை மாணவர்களுடனும் அவர் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4