150 கோடி சம்பளத்துடன் ப்ராஜெக்ட் கே படத்தின் வில்லனாக நடிக்க உள்ளார் கமலஹாசன்

#Cinema #Actor #TamilCinema #Project #Kamal #Tamilnews #ImportantNews
Mani
2 years ago
150 கோடி சம்பளத்துடன் ப்ராஜெக்ட் கே படத்தின் வில்லனாக நடிக்க உள்ளார் கமலஹாசன்

நாக் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடித்து வரும் ’புராஜெக்ட் கே’ படத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிக்க உள்ளதை, படக்குழு புரமோ வீடியோ வெளியிட்டு உறுதி செய்துள்ளது.

ஆதிபுருஷ் படத்துக்கு பிறகு நடிகர் பிரபாஸ் ’புராஜெக்ட் கே’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை ’நடிகையர் திலகம்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கிவருகிறார். சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.

வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் அமிதாப் பச்சன், தீபிகா படுகோனே, தீஷா பதானி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த நிலையில் இந்தப் படத்தில் நடிகர் கமல்ஹாசன் வில்லனாக நடிக்கவிருப்பதாகவும் அதற்காக அவருக்கு ரூ.150 கோடி சம்பளம் பேசியிருப்பதாகவும் சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக தகவல் பரவின.

இதனை படத்தை தயாரித்து வரும் வைஜெயந்தி மூவிஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்காக ஸ்பெஷல் புரமோ வெளியிட்டு கமல்ஹாசன் இணைந்துள்ளதை உறுதி செய்துள்ளது. இதனால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4