பிரித்தானியாவில் உதயமாகும் மற்றுமொரு மாவீரர் துயிலும் இல்லம்!
பிரித்தானியாவில் மற்றுமொரு மாவீரர் துயிலும் இல்லம் கட்டுவதற்கு முனைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதிகவிலையில் காணி கொள்வனவு செய்து மாவீரர் துயிலும் இல்லம் கட்டுவதற்கு ஒருசாரார் முயற்சி செய்துவருவதாக எமது செய்தி சேவைக்கு இரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
அதற்கான காணியை கொள்வனவு செய்யும் முயற்சிகள் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கிறன.
இந்நிலையில் இதுதொடர்பில் பல விமர்சனங்களும் எழுந்த வண்ணம் உள்ளன. அதாவது தாயகத்தில் விடுதலைக்காக போராடிய பல முன்னாள் போராளிகள் வாழ்வாதாரத்திற்கு இன்னல்ப்பட்டுக்கொண்டிருக்கும் அதேவேளை இவ்வாறான மாவீரர் துயிலுமில்லங்கள் தேவைதானா என ஒருசாரார் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஏற்கனவே பல மில்லியன் செலவில் BANBURY OXFORD வளாகத்தில் ஒரு துயிலுமில்லம் அனைவரும் ஒற்றுமையாக அஞ்சலி செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ளது.
எனினும் சிலரால் அதற்குள் முரண்பாடுகள் ஏற்பட்டதனால் இன்னுமொரு மாவீரர் துயிலும் இல்லம் பல மில்லியன் செலவில் அமைக்க உள்ளார்கள். இந்த மாவீரர் துயிலும் இல்லம் அமைப்பதற்காக பல மில்லியன் பவுன்ஸ்நிதி திரட்டும் செயற்பாடுகளும் இடம்பெற்று வருகின்றது.
வியாபார நோக்கோடு பல கோவில்கள் அமைப்பது போல தற்பொழுது மாவீரர் துயிலும் இல்லம் அமைக்கும் செயற்பாடுகளில் சிலர் ஈடுப்பட்டுள்ளனர்.
ஏற்கனேவே உள்ள மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் வாரத்தில் அஞ்சலி நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.
இவ்வாறான நிலையில் சிலரின் ஒற்றுமையீனங்கள் காரணமாக இன்னுமொரு மாவீரர் துயிலும் இல்லம் கட்டுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது.
இவ்வாறு மாவீரர் துயிலுமில்லம் கட்டும் பெருந்தொகை பணத்தினை தாயகத்தில் உள்ள முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரத்திற்கு வழங்கினால் அவர்களது குடும்பம் இறந்த போராளிகளின் நினைவாக வாழும் என சமூக ஆர்வலர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.