துல்கர் சல்மான் படத்தின் டீசரை வெளியிடும் மகேஷ் பாபு

#Cinema #Actor #trailer #Movies
Mani
2 years ago
துல்கர் சல்மான் படத்தின் டீசரை வெளியிடும் மகேஷ் பாபு

இயக்குனர் அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் வேஃபேரர் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் 'கிங் ஆஃப் கோதா'. ஜேக்ஸ் பிஜோய் மற்றும் ஷான் ரஹ்மான் இசையமைக்க, நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

துல்கர் சல்மானின் 11 வருட திரையுலக வாழ்க்கையை கொண்டாடும் விதமாக இந்த ஆண்டு ஓணம் அன்று ‘கிங் ஆஃப் கோதா’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு 'கிங் ஆஃப் கோதா' திரைப்படத்தின் கதாபாத்திரங்களை வீடியோ வெளியிட்டு படக்குழு அறிமுகப்படுத்தியது.

'கிங் ஆஃப் கோதா' படத்தின் டீசர் ஜூன் 28ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என்றும், படத்தின் பிரபலத்தை படக்குழு அறிவித்துள்ளது. மேலும் ஒரு போஸ்டரை வெளியிட்டு, தெலுங்கு டீசரை நடிகர் மகேஷ் பாபு வெளியிடுவார் என உறுதி செய்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4