2023 உலகக்கோப்பை கிரிக்கெட்- அட்டவணை வெளியீடு!

#India #India Cricket #WorldCup #sports #2023 #Breakingnews #ImportantNews #Chennai #Sports News #Kolkatta #Mumbai #World
Mani
3 years ago
2023 உலகக்கோப்பை கிரிக்கெட்- அட்டவணை வெளியீடு!

2023 ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர், இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ளன. இதன் போட்டி அட்டவணைகள் குறித்து ஆர்வத்துடன் பலரும் விரிவாக பேசி விவாதித்து வந்தனர். அரையிறுதிப் போட்டிகள், சென்னை மற்றும் பெங்களூருவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், மும்பை மற்றும் கொல்கத்தாவில் அரையிறுதிப் போட்டிகள் நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே திட்டமிட்டமிட்டபடி இறுதிப்போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்கான இறுதி அட்டவணை இன்று வெளியாகிறது.

இதனிடையே, முதல்முறையாக உலகக் கோப்பை அறிமுக நிகழ்ச்சி, விண்வெளியில் நடைபெற்றது. சிறப்பு பலூனில் விண்வெளிக்கு உலகக் கோப்பை அனுப்பப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டது. பின்னர் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தரையிறக்கப்பட்டது.

இன்று முதல் உலகின் 18 நாடுகளுக்கு உலகக் கோப்பை எடுத்துச் செல்லப்பட உள்ளது. இதன்படி, குவைத், பஹ்ரைன், மலேஷியா, அமெரிக்கா, நைஜீரியா, உகாண்டா உள்ளிட்ட நாடுகளுக்கு கொண்டுசெல்லப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4