தனது குழந்தைக்கு பெண் சூப்பர் ஸ்டாரின் பெயரை வைக்க திட்டமிட்டுள்ள பிரபுதேவா

#Actor #Actress #TamilCinema
Prasu
2 years ago
தனது குழந்தைக்கு பெண் சூப்பர் ஸ்டாரின் பெயரை வைக்க திட்டமிட்டுள்ள பிரபுதேவா

நடிகர் பிரபுதேவாவுக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்ததால், தனது மகளுக்கு நயன்தாரா என்று பெயரிட முடிவு செய்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர், நடன இயக்குனர், இயக்குனர், தயாரிப்பாளர் என தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிக்கொண்டவர். பிரபு தேவா கோலிவுட்டை விட பாலிவுட் படங்களை இயக்குவதில் அதிக ஆர்வம் காட்டினார். 

கரோனா காலத்தில் மும்பையில் இருந்த பிரபுதேவா முதுகு வலிக்கு பிசியோதெரபிஸ்ட் ஹிமலினி சிங்கிடம் சிகிச்சை எடுத்துக் கொண்டபோது இருவருக்கும் இடையே இருந்த நட்பு காதலாக மாறி பின்னர் திருமணத்தில் முடிந்தது.

2020 ஆம் ஆண்டில், பிரபு தேவா தனது குடும்பத்தினர் முன்னிலையில் ஹிமானி சிங்கை மிகவும் எளிமையாக திருமணம் செய்து கொண்டார். மேலும் பிரபுதேவா குடும்பத்தில் முதல் பெண் குழந்தை பிறந்துள்ளதாகவும், இதனால் ஒட்டுமொத்த குடும்பமும் மகிழ்ச்சியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

பெண் குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் பிரபுதேவா தனது மனைவி ஹிமானி சிங்குடன் திருப்பதி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது சமூக வலைதளங்களில் ஒரு வதந்தி வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பிரபுதேவா – ஹிமானி சிங்குடன் திருமணமாகி 3 வருடங்கள் கழித்து இந்த வருடம் பிரபுதேவாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. பிரபுதேவா தனது மகளுக்கு நயன்தாரா என்று பெயர் வைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சிலர் தூண்டிய இந்த செய்தி யூடியூப் மற்றும் சமூக வலைதளங்களில் வைரலானாலும், பிரபுதேவாவுக்கு நெருக்கமான சில நண்பர்கள், வாய்ப்பே இல்லை என கூறி வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4