'கொலை' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த விஜய் ஆண்டனி

#Cinema #Tamil Nadu #Actor #Actress #TamilCinema #release #2023 #Movie #Kollywood
Mani
2 years ago
'கொலை' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த விஜய் ஆண்டனி

இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி தற்போது 'கொலை' என்ற க்ரைம் த்ரில்லர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஏற்கனவே 'விடியும் முன்' படத்தை இயக்கிய பாலாஜி குமார் இயக்கியுள்ளார். 'கொலை' படத்தை இன்பினிட்டி & லோட்டஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது.

இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிகை ரித்திகா சிங் நடித்துள்ளார். மேலும், மீனாட்சி சவுத்ரி, ராதிகா சரத்குமார், முரளி சர்மா, அர்ஜுன் சிதம்பரம் மற்றும் பிற நடிகர்களும் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்துள்ளார், கிரீஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் 'கொலை' படத்தின் ரிலீஸ் தேதியை விஜய் ஆண்டனி அறிவித்துள்ளார். அதன்படி இப்படம் வருகிற ஜூலை 21ம் தேதி வெளியாகவுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தற்போது இணையத்தில் பிரபலமாகி வருகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4