பேருந்து கட்டணம் தொடர்பில் வெளியான தகவல்!

#Bus #Lanka4
Thamilini
2 years ago
பேருந்து கட்டணம் தொடர்பில் வெளியான தகவல்!

பேருந்து கட்டணத்தில் திருத்தங்களில் மாற்றம் ஏற்படுத்துவது அவசியமற்றது என பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.  

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதன்போது போது கருத்து தெரிவித்த அவர், வருடாந்த பேருந்து கட்டண திருத்தத்துக்கு அமைய இம்முறை பேருந்து கட்டணத்தில் மாற்றம் ஏற்படுத்துவது அவசியமற்றது எனக் கூறினார். 

12 பிரதான காரணிகளை அடிப்படையாகக் கொண்டு பேருந்து கட்டணம் திருத்தம் செய்யப்படவுள்ளதாகவும், கொவிட் பெருந்தொற்று காலத்தில் 20 சதவீதத்தால் பேருந்து கட்டணம் அதிகரிக்கப்பட்டதாகவும் அவர்சுட்டிக்காட்டினார்.  

பேருந்து கட்டணத்தை குறைத்து பொது மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என போக்குவரத்து அமைச்சு முன்வைத்த கோரிக்கைக்கு ஆதரவாக செயற்பட்டுள்ளோம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.  

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4