மல்லோர்கா ஓபன் டென்னிஸ் சிட்சிபாஸ் அதிர்ச்சி தோல்வி

#sports #Tennis #Sports News
Mani
3 years ago
மல்லோர்கா ஓபன் டென்னிஸ்  சிட்சிபாஸ் அதிர்ச்சி தோல்வி

மல்லோர்கா ஓபன் டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் தற்போது நடைபெற்று வருகிறது. ஆடவர் ஒற்றையர் பிரிவில் 5வது இடத்தில் இருக்கும் சிட்சிபாஸ் எதிர்பாராத தோல்வியை சந்தித்தார். காலிறுதிக்கு முந்தைய சுற்றில், அவர் ஜெர்மனியைச் சேர்ந்த யானிக் ஹான்ப்மேனை எதிர்கொண்டார்.

முதல் சுற்றை 4-6 என சிட்சிபாஸ் இழந்த போதிலும், 2-வது செட்டை 6-3 எனக் கைப்பற்றினார். வெற்றியை தீர்மானிக்கும் 3-வது சுற்றில் ஜெர்மனி வீரர் ஹான்ப்மேன் அபாரமாக விளையாடினார். அவருக்கு சிட்சிபாஸால் ஈடுகொடுக்க முடியவில்லை.

அதனால் 2-6 என எளிதில் 3-வது செட்டில் தோல்வியடைந்து போட்டியில் இருந்து வெளியேறினார். யானிக் ஹான்ப்மேன் 6-4, 3-6, 6-2 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4