கேப்டன் மில்லர் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் -படக்குழு அறிவிப்பு

#Cinema #TamilCinema #2023 #trailer #Tamilnews #Breakingnews
Mani
2 years ago
கேப்டன் மில்லர் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் -படக்குழு அறிவிப்பு

அருண் மாதேஸ்வரன் இயக்கிய கேப்டன் மில்லர் படம் தற்போது மிகவும் பரபரப்பான படம். இலங்கை விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த "கேப்டன் மில்லர்" என்ற போராளியின் கதையை மையமாக வைத்து இப்படம் உருவாகிறது.

தற்போது கேப்டன் மில்லர் பட குழு வெளியிட்டுள்ள தகவலின் படி நாளை மாலை 5 மணிக்கு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக இருக்கிறது. ஆனால் அதை அறிவிக்க அவர்கள் ஒரு போஸ்டரை தற்பொழுது வெளியிட்டுள்ளனர், அந்த போஸ்டரே வெளித்தனமாக இருக்கிறது என்று தனுஷ் ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் கொண்டாடி வருகின்றனர்.

இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தற்பொழுது தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த அப்டேட்டை வெளியிட்டுள்ளார். வசந்த் ரவி நடிப்பில் கடந்த 2021ம் ஆண்டு வெளியான "ராக்கி" என்ற திரைப்படத்தை இயக்கியது அருண் மாதேஸ்வரன் என்பது குறிப்பிடத்தக்கது, அதன் பிறகு 2022ம் ஆண்டு கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன் நடிப்பில் வெளியான "சாணி காகிதம்" திரைப்படத்தை இயக்கியதும் அவர்தான்.

இந்த நிலையில் இவர் இயக்கிய கேப்டன் மில்லர் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தனுஷ், கன்னட உலகின் தலைசிறந்த நடிகரான பிரியங்கா அருள் மோகன், சிவராஜ் குமார், சந்தீப் கிஷன், பழம்பெரும் நடிகர் நாசர், பால சரவணன் ஆகியோர் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4