சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தின் புதிய அப்டேட்

#India #Cinema #TamilCinema #Film #trailer #Movie
Mani
2 years ago
சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தின் புதிய அப்டேட்

சிவகார்த்திகேயன் தற்போது ‘மண்டேலா’ படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கும் ‘மாவீரன்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகிறது. தெலுங்கில் இப்படத்திற்கு 'மாவீருடு' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள படம் 'மாவீரன்'. ஜூலை 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள நிலையில், படக்குழு தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. சமீபத்தில் சிவகார்த்திகேயனின் 'மாவீரன்' படத்தின் டப்பிங் பணிகள் முடிவடைந்ததாக படக்குழுவினர் அறிவித்தனர்.

மாவீரன் படத்தின் முன் வெளியீட்டு விழா ஜூலை 2ஆம் தேதி சாய் ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது. அதன்படி மாவீரன் படத்தின் ஓவர் சீஸ் உரிமையை பிரபல நிறுவனமான் ஹாம்சினி மற்றும் ஹகிம்சா நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4