இந்தியன் -2 ரிலீஸ் எப்போது தெரியுமா?

#Cinema #Actor #TamilCinema #Director #Kamal #release #trailer #jeishankar #Movie
Mani
2 years ago
இந்தியன் -2 ரிலீஸ் எப்போது தெரியுமா?

தற்போது ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் கமல்ஹாசன் நடித்து வருகிறார். கமல் தவிர, சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் குறிப்பிடத்தக்க வேடங்களில் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக நடைபெற்று தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சமீபத்தில் 'இந்தியன்-2' படத்தின் படப்பிடிப்பு சென்னை விமான நிலையத்தில் நடந்தது. இந்த படப்பிடிப்பை நடத்துவதற்காக படக்குழுவினர் ரூ.1.24 கோடி கட்டணம் செலுத்தி சென்னை விமான நிலைய ஆணையத்திடம் முன் அனுமதி பெற்றுள்ளனர்.

இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 'இந்தியன் -2' திரைப்படத்தை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4