ஆஷஸ் 2வது டெஸ்ட்; முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 325 ரன்னில் ஆல் அவுட்

#Newyork #world_news #Cricket #sports #England #Sports News
Mani
2 years ago
ஆஷஸ் 2வது டெஸ்ட்; முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 325 ரன்னில் ஆல் அவுட்

ஆஷஸ் தொடரில் 2-வது டெஸ்ட் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 416 ரன்கள் குவித்தது. நேற்றைய 2-ம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து 4 விக்கெட் டுக்கு 278 ரன்கள் எடுத்துள்ளது.

இந்நிலையில் ஹாரி புருக் 45 ரன்னிலும், பென் ஸ்டோக்ஸ் 17 ரன்னிலும் 3-வது நாள் ஆட்டத்தை தொடங்கினர். ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே பென் ஸ்டோக்ஸ் 17 ரன்னில் அவுட் ஆனார். அதைத் தொடர்ந்து ஹாரி புரூக் அரை சதம் அடித்து வெளியேறினார்.

அடுத்து வந்த பேர்ஸ்டோவ் 16, பிராட் 12, ராபின்சன் 9, ஜோஸ் டங் 1 என சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 325 ரன்கள் எடுத்தது. இதனால் ஆஸ்திரேலிய அணி 91 ரன்கள் முன்னிலையில் தனது 2-வது இன்னிங்சை ஆடி வருகிறது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4