ஒரு கிலோ பச்சை மிளகாயின் சில்லறை விலை ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பு

#SriLanka #prices #Vegetable #Lanka4 #Super_Market
Kanimoli
2 years ago
ஒரு கிலோ பச்சை மிளகாயின் சில்லறை விலை ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பு

காய்கறி சந்தையில் ஒரு கிலோ பச்சை மிளகாயின் சில்லறை விலை ஆயிரம் (1,000) ரூபாவாக அதிகரித்துள்ளது. ஒரு கிலோ பச்சை மிளகாயின் மொத்த விலையும் 800 முதல் 900 ரூபா வரை அதிகரித்துள்ளதாக பொருளாதார மத்திய நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 கடந்த வாரங்களில் ஒரு கிலோ பச்சை மிளகாய் 350 முதல் 500 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டது. காய்கறி மார்க்கெட்டுக்கு வரும் பச்சை மிளகாயின் அளவு பெருமளவில் குறைக்கப்பட்டதால் விலை உயர்ந்துள்ளதாக காய்கறி வியாபாரிகள் கூறுகின்றனர்.

 எவ்வாறாயினும், எதிர்வரும் நாட்களில் பச்சை மிளகாயின் விலை மேலும் அதிகரிக்கும் என மரக்கறி சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4