'மாவீரன்' படத்தின் டிரைலர் நாளை வெளியாகிறது மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

#Cinema #Actor #TamilCinema #Tamilnews #Movie
Mani
2 years ago
'மாவீரன்' படத்தின் டிரைலர் நாளை வெளியாகிறது மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

சிவகார்த்திகேயன் நடித்த ’மாவீரன்’ திரைப்படம் இம்மாதம் 14ஆம் தேதி வெளியாக இருப்பதாக ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாக கூறப்பட்டது.

ஏற்கனவே சென்னையில் உள்ள பிரபலமான கல்லூரியில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டு இருந்த நிலையில் தற்போது டிரைலர் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து சிவகார்த்திகேயன் ரசிகர்கள் துள்ளி குதித்து வருகின்றனர். தேசிய விருது பெற்ற ‘மண்டேலா’ என்ற திரைப்படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தின் டிரைலர் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

சிவகார்த்திகேயன் ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்துள்ள 'மாவீரன்’ படத்தில் மிஷ்கின், யோகி பாபு, சுனில் உள்பட பலர் நடித்து வருகின்றனர். மேலும் நடிகை சரிதா ஒரு முக்கிய குணச்சித்திர கேரக்டரில் நடித்துள்ளார். தமிழ் தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்திற்கு பரத் ஷங்கர் இசையமைத்து வருகிறார். விது அய்யனார் ஒளிப்பதிவில் ஃபிலோமின்ராஜ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4