ஹனு-மான் படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் ஒத்திவைப்பு

#Cinema #TamilCinema #Film #Movie
Mani
2 years ago
ஹனு-மான் படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் ஒத்திவைப்பு

பிரசாந்த் வர்மா இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ஹனு மான்’. கதையின் நாயகியாக தேஜா சஜ்ஜா நடிக்கிறார், அவருக்கு ஜோடியாக நடிகை அம்ரிதா ஐயர் நடிக்கிறார். மேலும், வரலக்ஷ்மி சரத்குமார், வினய் ராய், கெட்டப் சீனு, ராஜ் தீபக் ஷெட்டி மற்றும் பலர் படத்தில் குறிப்பிடத்தக்க வேடங்களில் நடித்துள்ளனர். தாசரதி சிவேந்திரா ஒளிப்பதிவு செய்துள்ளார், கௌரஹரி, அனுதீப் தேவ் மற்றும் கிருஷ்ணா சௌரப் ஆகிய மூன்று இசையமைப்பாளர்கள் இசையமைத்துள்ளனர்.

இப்படத்தை ப்ரைம் ஷோ என்டர்டெய்ன்மென்ட் எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே.நிரஞ்சன் ரெட்டி தயாரித்துள்ளார். இப்படம் மே 12-ஆம் தேதி தெலுங்கு, இந்தி, மராத்தி, தமிழ், கன்னடம், மலையாளம் மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து சில காரணங்களால் இப்படம் வெளியாகவில்லை.

இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, 'ஹனு-மான்' படம் 2024 ஜனவரி 12-ம் தேதி வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4