மாமன்னன் படத்தின் வெற்றிக்கு மாரி செல்வராஜ்க்கு சிறப்பு பரிசு

#Cinema #TamilCinema #Movie
Mani
2 years ago
மாமன்னன் படத்தின் வெற்றிக்கு  மாரி செல்வராஜ்க்கு சிறப்பு பரிசு

பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ‘மாமன்னன்’ உருவாகியுள்ளது. இப்படத்தில் வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் குறிப்பிடத்தக்க கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரித்து, ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படம் கடந்த 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நேற்று 'மாமன்னன்' படத்தின் வெற்றியை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர்.

இந்நிலையில், மாமன்னன் படத்தின் வெற்றிக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில், ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இயக்குனர் மாரி செல்வராஜ்க்கு மினி கூப்பர் காரை பரிசாக வழங்கியுள்ளது. இந்நிகழ்ச்சியில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் இணை தயாரிப்பாளர்கள் உதயநிதி ஸ்டாலின், எம்.செண்பகமூர்த்தி, ஆர்.அர்ஜுன் துரை, விநியோக நிர்வாகி சி.ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4