பிரித்தானியாவில் ரயில் பயணிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள செய்தி!
#world_news
#Lanka4
Dhushanthini K
1 year ago

பிரித்தானியாவில் ரயில் ஓட்டுநர்கள் ஆறு நாட்களுக்கு கூடுதல் நேரம் வேலை செய்ய மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால் இந்த வாரம் நாடு முழுவதும் ரயில் பயணங்களுக்கு இடையூறு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்படி இன்று (திங்கட்கிழமை) முதல் ஜூலை 8 (சனிக்கிழமை) வரை 35 ரயில் ஆபரேட்டர்களில் 16 பேர் கூடுதல் நேரம் வேலை செய்வதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.
ரயில்வே தொழிலாளர்களின் இந்த வேலைநிறுத்தம் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியை பார்வையிட வருபவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.
இதேவேளை இதுவரையில் இந்த விவகாரம் குறித்து தொழிற்சங்கங்களுடன் எவ்வித பேச்சுவார்தைகளும் முன்னெடுக்கப்படவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



