ஜிகர்தண்டா 2 படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த படக்குழுவினர்

#Cinema #Actor #Actress #TamilCinema
Mani
2 years ago
ஜிகர்தண்டா 2 படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த படக்குழுவினர்

2014 ஆம் ஆண்டு கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ஜிகர்தண்டா திரைப்படம், மதுரையை மையமாக வைத்து, சித்தார்த் கதாநாயகனாக நடித்த இந்த படத்தில் லட்சுமி மேனன் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த பாபி சிம்ஹா நடித்திருந்தார். இந்த படத்துக்காக 2014-ம் ஆண்டின் தேசிய விருதை பாபி சிம்ஹா பெற்றார்.

8 ஆண்டுகளுக்கு பிறகு தொடங்கிய ஜிகர்தண்டா இரண்டாம் பாகம் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்ஸ் ஆகியோர் முக்கிய நடிகர்களாக நடித்துள்ளனர். சமீபத்தில், படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பலரையும் கவர்ந்தது.

இந்த நிலையில், படக்குழுவினர் வீடியோ ஒன்றைப் பகிர்ந்து, வேகமாக நடந்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்ததாக அறிவித்துள்ளனர். மேலும், கேக் வெட்டியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதில், தியேட்டரில் சந்திப்போம் என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஜிகர்தண்டாவின் இரண்டாம் பாகம் இந்த ஆண்டு தீபாவளிக்கு தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்த அறிவிப்பை படக்குழுவினர் போஸ்டர் மற்றும் வீடியோ மூலம் வெளியிட்டுள்ளனர். இந்த செய்தியை கேட்ட ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4