ஆஸ்கருக்கு செல்லும் விக்ரமின் தங்கலான்!

#India #Cinema #Actor #TamilCinema #Tamilnews #Breakingnews #Award #Oscar
Mani
2 years ago
ஆஸ்கருக்கு செல்லும் விக்ரமின் தங்கலான்!

விக்ரம் ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு கேரக்டருக்குத் தன் தோற்றத்தை மாற்றிக்கொண்டிருக்கிறார். முந்தைய பிதாமகன், அந்நியன், கந்தசாமி, பீமா, தெய்வத்திருமகள், ஐ, கடாரம் கொண்டான், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட பல படங்கள் இதற்கு சாட்சிகளாக உள்ளன.

தற்போது பா.ரஞ்சித் இயக்கி வரும் தங்கலான் படமும் விக்ரமின் கேரியரில் குறிப்பிடத்தக்க படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோலார் தங்க வயல்களில் உழைக்கும் தொழிலாளர்களின் வாழ்க்கை மற்றும் அவர்கள் ஆதிக்க வர்க்கத்திற்கு எதிரான போராட்டத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகிறது.

இதில் விக்ரம் நீண்ட தாடி, தலைமுடியுடன் பண்டைய கால காட்டுவாசி போன்று வித்தியாசமாக நடிக்கும் தோற்றம் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது. இதற்காக பலமணிநேரம் மேக்கப் போட்டு நடிக்கிறார். தங்கலான் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடப்பதாகவும் இன்னும் 10 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு பாக்கி உள்ளதாகவும் தங்கலான் படத்தை ஆஸ்கருக்கு அனுப்ப முடிவு செய்து இருப்பதாகவும் படக்குழு அறிவித்து உள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4