'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்' ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு அறிவிப்பு

#Cinema #TamilCinema #Film #Movie
Mani
2 years ago
'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்' ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு அறிவிப்பு

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் ஆர்யா நடித்த 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்' படம் ஜூன் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தில் 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான சித்தி இத்னானி கதாநாயகியாக நடித்திருந்தார்.

மேலும், முக்கிய வேடங்களில் பிரபு, கே.பாக்யராஜ், மாஸ்டர் மகேந்திரன், பி.எஸ்.அவினாஷ், ஆடுகளம் நரேன், மதுசூதன் ராவ், ரேணுகா மற்றும் பலர் நடித்துள்ளனர். ராமநாதபுரம் பின்னணியில் உருவாகியிருந்த இந்த திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்திருந்தார்.

இந்நிலையில் 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்' படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி ஜீ5 ஓடிடி தளத்தில் ஜூலை 7-ம் தேதி வெளியாகவுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4