தங்கலான் படக்குழு படப்பிடிப்பை நிறைவு செய்தனர்

#India #Cinema #Actor #Actress #TamilCinema #Director #2023 #Movies #Movie
Mani
2 years ago
தங்கலான் படக்குழு படப்பிடிப்பை நிறைவு செய்தனர்

பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படம் 'தங்கலான்'. ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இப்படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஜி.எஃப். குறித்த கதை என்று இயக்குனர் பா.இரஞ்சித் தெரிவித்திருந்தார். இதனால் இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி மற்றும் பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் ஆகியோர் நடித்துள்ளனர்.

'தங்கலான்' படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு துவங்கி தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நடிகர் விக்ரம் சமீபத்தில் திரைப்பட ஒத்திகையின் போது காயம் மற்றும் விலா எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் விக்ரம் சிறிது காலம் படப்பிடிப்பில் பங்கேற்க முடியாது என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் விக்ரம் மீண்டும் படப்பிடிப்பை தொடங்கினார்.

இந்நிலையில், தங்கலான் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக விக்ரம் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை வெளியிட்டுள்ள அவர், இதன் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. என்ன ஒரு அற்புதமான பயணம்! ஒரு நடிகராக, சில நம்பமுடியாத திறமையான நபர்களுடன் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது, அது ஒரு உற்சாகமான அனுபவமாக இருந்தது. முதல் படத்திற்கும் கடைசி படத்திற்கும் இடையே 118 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. இந்த கனவை வாழ வைத்ததற்கு நன்றி ரஞ்சித். ஒவ்வொரு நாளும். என்று குறிப்பிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4