'மாமன்னன்' படத்தைப் பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

#India #Cinema #Actor #TamilCinema #Director #celebration #rajini kanth #latha rajinikanth
Mani
2 years ago
'மாமன்னன்' படத்தைப் பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் 'மாமன்னன்' திரைப்படத்தை நடிகர் ரஜினிகாந்த் வெகுவாக பாராட்டியுள்ளார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள 'மாமன்னன்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் பலரும் இந்த திரைப்படத்தை பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் தற்போது இந்த திரைப்படத்தை பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள பதிவில் " 'மாமன்னன்' திரைப்படம் சமத்துவத்தை வலியுறுத்தும் மாரி செல்வராஜின் ஒரு அருமையான படைப்பு. அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். மிகச் சிறப்பாக நடித்திருக்கும் வடிவேலு, உதயநிதி, பகத் பாசில் ஆகியோருக்கு எனது வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார். நடிகர் ரஜினிகாந்தின் இந்த வாழ்த்து படக்குழுவினருக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4